அடங்காத காமம்…காதலனுக்காக கணவனை அடித்தே கொன்று லுங்கியில் தொங்கவிட்ட பாசக்கார மனைவி..!!

அப்பாவி கணவனை, கள்ளக்காதலனை வைத்தே அடித்து கொன்றுள்ளார் சாந்தி.. லுங்கியிலேயே ஏரிக்கரை மரத்தில் பிணமாக தொங்கவிட்ட சம்பவம் செஞ்சியையே அலற வைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மேல்வயலாமூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் கார்த்திகேயன்.. 32 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி.இவரது மனைவிதான் சாந்தி. அவருக்கு 30 வயதாகிறது. கடந்த 17- ஆம் திகதி இரவு அங்கிருந்த ஒரு ஏரிக்கரை மரத்தில் கார்த்திகேயன் பிணமாக தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

இதையடுத்து அவலூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்தனர்..கார்த்திகேயன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையும் ஆரம்பமானது.. அன்றைய தினம், ஏரிக்கரைக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றுவிட்டு வருவதாக சாந்தியிடம் சொல்லிவிட்டுதான் போயுள்ளார்..இதனிடையே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உடம்பில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டது.. அதனால், யாரேனும் ஏரிக்கரையில் அவரை அடித்து தொங்கவிட்டிருக்கலாமோ என்று சந்தேகம் வலுத்த நிலையில், சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முதல் விசாரணையே சாந்தியிடம்தான்.. காரணம் நாசமாய் போன கள்ளக்காதல்… திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தங்கமணி என்பவருடன் சாந்திக்கு தொடர்பு இருந்துள்ளது.. கரும்பு வெட்ட கிராமத்துக்கு வரும்போதுதான் தங்கமணியுடன் சாந்தி குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது..அப்போதுதான் சாந்தியுடன் லவ் மலர்ந்துள்ளது… அடிக்கடி தனிமையில் ஜாலியாகவும் இருந்துள்ளனர்.சம்பவத்தன்று சாந்திதான் தங்கமணியையும், அவரது நண்பரையும் ஏரிக்கரைக்கு கொலை செய்ய அனுப்பி வைத்துள்ளார்.. கார்த்திகேயனை சந்தித்த தங்கமணி, ஏரிக்கரையிலேயே மது ஊற்றி தந்துள்ளார்.. போதை ஏறியதுமே கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.தற்கொலை போல இருக்க வேண்டும் என்பதற்காக அவரது லுங்கியை அவிழ்த்து மரத்தில் தொங்கவிட்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.இதில், கொடுமை என்னவென்றால், சாந்தியின் கள்ள உறவு கார்த்திகேயனுக்கு தெரியாது.. ஒருவேளை தெரிந்துவிட்டால், இப்படி தனிமையில் இருப்பதற்கு தடையாக இருப்பார் என்று நினைத்து, அவரை முன்கூட்டியே கொன்றுவிட்டனர்… எதற்காக தன்னை அடிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள் என்றே தெரியாமல் அப்பாவி கணவர் உயிர் பறிபோய்விட்டது!