கிணற்றிலிருந்து திடீரென வெளியேறிய நீராவி.!! பதறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றில் வெந்நீராவி வெளிவந்த சம்பவமொன்று இன்றைய தினம் இடம் பெற்றுள்ளது.

கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் உள்ள கிணற்றில் நீர் கொதிப்பாக காணப்படுவதாகவும், வெந்நீராவி வெளியேறுவதாகவும் தகவல் பரவியுள்ளது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர மற்றும் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மின்சார சபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர்.இந்த நிலையில், மின்சார கம்பி ஒன்று கிணற்றில் காணப்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கினால் தான் நீர் சூடாகி வெந்நீராவி வெளியேறியுள்ளதாகவும், எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.