முல்லையில் கோர விபத்து..ஸ்தலத்தில் பலியான இளைஞன்.!!

ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்பு வீதியின் கற்சிலைமடுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 09 மணியளவில் ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த குறித்த நபர் மீது, நெல் ஏற்றி வந்த பாரவுர்தி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய தங்கராசா ஜெனிபன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.