சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக இலங்கையில் ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை…!!

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைகளுக்காக 65 டொலர் பணம் அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.PCR பரிசோதனை முடிவுகள் 24 மணித்தியாலங்களில் கிடைக்கும் வரையில் வெளிநாட்டவர்கள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்க வேண்டும். அதற்கமைய கொரோனா தொற்றவில்லை என உறுதி செய்யப்பட்டால் சுற்றுலாப் பயணங்களுக்கு குறித்த பயணி அனுமதிக்கப்படுவார்.எப்படியிருப்பினும் அந்த சுற்றுலா பயணிக்கு 5 நாட்களின் பின்னர் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களின் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.