பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.அணியின் முன்னணி வீரர்களான ஹைடர் அலி, ஹரிஸ் ரவூப் மற்றும் சதாப் கான் ஆகியோருக்கே கொவிட்-19 இற்க்கு சாதகமான சோதனை முடிவுகள் வந்துள்ளன.இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ராவல்பிண்டியில் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.இதில், அறிகுறியற்ற நிலையில் குறித்த மூவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த மூவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மருத்துவ குழு, உடனடியாக சுய தனிமைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.மேலும், கராச்சி, லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய இடங்களில் சோதனை செய்யப்பட்ட மற்ற வீரர்களின் முடிவுகளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை காத்திருக்கிறது.