நாட்டின் சில பிரதேசங்களில் கடும் மழைக்கான சாத்தியம்..வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை..!!

இலங்கையின் தென்,கிழக்கு, தென்கிழக்கு கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் திடீரென மணித்தியாலத்துக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.இந்த நேரத்தில் கடல் பெரும்பாலும் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான மையம் எதிர்வு கூறியுள்ளது.எனவே, கடற்றொழில் சமூகம் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.இதேவேளை இன்று வானிலையில் மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்.வடக்கு,கிழக்கிலும் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.ஊவாவில் பிற்பகல் 2மணிக்கு பின்னர் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதி மற்றும் தென்மாகாணங்களில் காற்று 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.