குற்ற விசாரணைப் பிரிவில் சற்று முன்னர் ஆஜரான கருணா!!

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சற்று முன்னர் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக அவர் வருகைத்தந்துள்ளார்.அம்பாறையில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்த நான் கொரோனாவை விடவும் கொடியவன் என கருணா குறிப்பிட்டிருந்தார்.இந்த கூற்று பாரிய சர்ச்சையை ஏற்பட்டிருந்த நிலையில், உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நேற்று பதில் பொலிஸ் மா அதிபர் குற்ற விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Q