வரலாற்றில் முதன்முறையாக 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்!!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.4 ரூபாவாக பதிவாகியுள்ளது.இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை ரூபாவின் பெறுமதி 9.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.