கொரோனாவினால் வந்த அவலம்.!! வானமே எல்லையாக இருந்த விமானிக்கு ஏற்பட்ட கதி.!!

கொரோனா வைரஸ் எதிரொலியால் விமானி ஒருவர் உணவு விநியோகம் செய்யும் வேலை பார்த்து வரும் நிலைக்கு சென்றுள்ளார்.தாய்லாந்து நாட்டை சேர்ந்த உதவி விமானி நக்கரின் இன்டா என்பவரே மேற்படி வேலையை செய்து வருகிறார். 4 ஆண்டுகளாக விமானியாக இருந்த இவர் தற்போது உணவு விநியோக தொழிலுக்கு மாறியுள்ளார்.அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் எதிரொலியால் விமானத்தளங்கள் மூடப்பட்டுள்ளதால், விமான பணி சார்ந்து வேலை செய்வோர் வேலையிழந்துள்ளனர்.விமானி நக்கரின் இண்டா மாதத்தில் 4 முதல் 6 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். ஆனால், கொரோனா காலகட்டத்தில் வெறும் 2 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பது கடினமாக இருப்பதால் ஒன்லைன் உணவு விநியோக வேலையில் இறங்கியுள்ளார்.

ஏர்லைன்ஸ் தங்கள் ஊழியர்களில் பெரும்பாலானோரை சம்பளமின்றி விடுப்பில் அனுப்பியுள்ளது. இருப்பினும், சம்பளம் வழங்கப்படும் ஊழியர்கள் மிகக் குறைவு.பலரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த கடினமான நேரத்தில், எனது சக ஊழியர்கள் பலர் கிடைத்த வேலைகளைச் செய்கிறார்கள். எல்லோரும் பணிக்குத் திரும்ப காத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.மேலும் குறைந்த சம்பளத்தை எதிர்கொள்வது கஷ்டமான சூழலாக உள்ளது. நான் முதன்முறையாக ஒரு வாடிக்கையாளருக்கு உணவு விநியோகம் செய்யும் போது அந்த உணர்வு நன்றாகத் தான் இருந்தது.என்னால் எதையும் செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்.நான் எனது சகபணியாளர்கள், என்னுடைய கப்டன், எனது குழுவில் வேலைசெய்பவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களையும் இழந்துள்ளேன்.எல்லாவற்றுக்கும் மேலாக வானமே எல்லையாக இருந்த எனது பணியை நான் பெரிதும் இழந்து தவிக்கிறேன்’எனவும் பேட்டியளித்துள்ளார்.