இன்று காலை யாழ் நகரில் கோர விபத்து…ஒருவர் ஸ்தலத்தில் பலி..!!

யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்.பல்கலைகழக பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பண்டத்தரிப்பு பற்றிமா வீதியை சேர்ந்த 50 வயதான பாதுகாப்பு உத்தியோகஸ்த்தரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.