இலங்கையில் கொரோனா நோயாளிகளின் இன்றைய நிலை குறித்து சற்று முன்னர் வெளியான தகவல்..!!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமான மேலும் 12 கடற்படையினர் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.சிகிச்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இவர்கள், பீசீஆர் பரிசோதனைகளின் மூலம் கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டமையை அடுத்து பல்வேறு வைத்தியசாலைகளில் இருந்து வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 785ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை குணமடைந்த கடற்படை வீரர்கள் மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்யை 1498ஆக உயர்ந்துள்ளது.