பழைய நோய்களை வேரிலிருந்து அழிக்க வல்ல அற்புதமான மூலிகை இது தான்…!!

புல் இனத்தில் ஒரு வகை நாணல். நாணலானது தண்ணீர் அதிகம் இருக்கும் இடங்களில்தான் அதிகமாக வளரும். இதனால் இயற்கையாகவே நாணலுக்கு குளிர்ச்சித் தன்மை உண்டு. அந்த நாணலின் ஒருபகுதிதான் கோரைப்புல். இதிலிருந்துதான் பாய் தயாரிக்கப்படுகிறது. கோரைப்புல்லில் இருந்து தயாரிக்கும் பாய்களால் மட்டும்தான் உடலுக்கு நன்மை சேர்கிறதா என்றால் முழுமையாக இல்லை.

இப்போது பாயை சாதாரண பருத்தி நூலில் நெய்கிறார்கள். முன்னர் செய்யும் பாய்களும் அதை நெய்யப் பயன்படுத்தும் நூலும் கூட மருத்துவ குணம் கொண்டதாகத்தான் இருந்தன. கற்றாழை குருத்துகளை எடுத்து இருபுறமும் கைப்பிடியுள்ள தரஸ்கு என்ற கருவி மற்றும் பலகையை வைத்து அதில் இருந்து ‘மறல்’ எடுப்பார்கள்.

அதை மூட்டையாகக் கட்டி கதிர் என்ற கருவி மூலம் நூல் தயாரிக்கப்படும். அந்த நூலைத்தான் கோரைப்புற்களை நெய்யப் பயன்படுத்துவர். இதன் மூலம் இரண்டுமே சேர்ந்து உடலுக்கு அதிக மருத்துவக்குணத்தைக் கொடுக்கிறது.

கழு என்றொரு கோரைப்புல் வகை உண்டு. அந்த வகை கோரைப்புல்லை கொண்டு பாய் பின்னும் போது கற்பூர வாசனையை உணர முடியும். கழு கோரைப்புல்லினால் பின்னப்பட்ட பாயின் அருகில் தேள்,பூரான் உள்ளிட்ட விஷபூச்சிகள் நெருங்காது.

மேலும் கழு கோரைப்புல்லை கொண்டு பின்னப்பட்ட பாய்களில் படுத்து உறங்கினால் இயற்கையாகவே அதனுடைய மணமான கற்பூர வாசத்தினை நம்மால் உணர முடியும். அதன் மருத்துவ குணங்கள் உடல் நலனைக் காக்கும்..”கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை “என்ற சொலடை மறுவி கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்றானது..மேலும் இந்த மூலிகை பற்றிய தகவல்களை கீழுள்ள வீடியோ மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்