இலங்கையில் ஒரே குடும்பத்தில் மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று..சற்று முன் வைத்தியசாலையில் அனுமதி!

களுத்துறையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட நபரின் தந்தை மற்றும் சகோதரி சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் குறித்த இருவருக்கும் காணப்பட்டுள்ளன. இதனால் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் மூலம் களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.டுபாய் நாட்டில் இரண்டு நாட்கள் கழித்து விட்டு கடந்த 19ஆம் திகதி இலங்கை வந்த நபர் கடந்த 6 நாட்களாக அட்டுழுகம பிரதேசத்தின் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.அவர் பலருடன் நெருக்கமாக பழகியதாக தெரியவந்துள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரின் தந்தையும் சகோதரியுமே இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.களுத்துறை மாவட்டம் கொரோனா வைரஸினால் ஆபத்தான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.