என் அன்புக் குழந்தையே….இது உன் ஷீர்டி சாயி பாபா…!

என் அன்புக் குழந்தையே.. உன்னை விட்டு நான் எங்கு நகருவேன் என் குழந்தையை கவனிப்பதை தவிர வேறு என்ன எனக்கு வேலை. ஏன் உன்னையே நீ ஏளனமாக கருதுகிறாய்? நீ யாருக்கும் சளைத்தவர் அல்ல. அறிவிலும் திறமையிலும் சரி உனக்கான சாதுரியம் என்பது தனித்துவம் பெற்றது.

உனக்கே ஏன் உன் திறமை மேல் உனக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய்.உனக்கு புரிய வைப்பதற்காவே சில நிகழ்வுகளை நிகழ்த்துகிறேன்.பணத்தை வைத்து எடைப்போடும் சில பேரிடம் இருந்து உன்னை நான் தூரப்படுத்தினேன்.அவர்களின் உண்மையான முகத்தை உனக்கு நான் சுட்டிக் காட்டி உள்ளேன்.

பணம் மட்டுமே உயர்வை தருகிறது என்று நினைப்பவர்களிடம் இருந்து நீ விலகியே இரு.ஏனெனில் அவர்கள் உன் உயர்வை பார்த்து பொறாமை பட கூடியவர்களாக இருக்கக் கூடும். அதனால், நீ உன் சுற்று வட்டாரத்தை பார்த்தே வாழ பழகிகொள்.நீ தற்போது பணம் இல்லாமல் தவி்க்கலாம், ஆனால் நிச்சயம் உன் கடன் பிரச்சினை அனைத்தும் முடியும் நேரத்தை நீ தொட்டு விட்டாய்.உன்னை ஒருபோதும் நிற்கதியாய் விட மாட்டேன்.என் பிள்ளையின் நிம்மதியில் தான் என் மனநிறைவு அமைந்திருக்கிறது.என் வார்த்தை உனக்கான இரத்த ஓட்டத்தை போல் இனிமேல் என் நாவில் தோன்றும் சொற்களின் பேர் அருளை பெறுவாய்.

நீ எதற்கும் பயப்படாதே… கலங்காதே… உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு நான் இருப்பேன்.உலகத்தில் என்ன மாறினாலும், நகன்றாலும் நான் உன்னை விட்டு ஒரு போதும் அகலமாட்டேன். உன்னில் எப்போதும் நான் இருப்பேன்.

-இது உன் ஷீர்டி சாயி பாபா…!

-ஓம் ஸ்ரீ சாய் ராம்🕉️ -ஓம் ஸ்ரீ சாய் ராம்🕉️ -ஓம் ஸ்ரீ சாய் ராம்🕉️