வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பக் காத்திருக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு..!!

இலங்கை வருவதற்கு எதிர்பார்க்கும் அனைத்து வெளிநாட்டு வாழ் இலங்கையர்களையும் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய இந்த மாத இறுதிக்குள் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கு மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இலங்கையில் இதுவரையில் 95,087 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், கடந்த இரண்டு நாட்களாக ஒரு நோயாளியேனும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.இதுவரை, 1950 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1500யை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது