நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவிலில் படையினர் நடந்த கொண்ட விதம் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார்.
வரலாற்றுப் பெருமைமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவில் உற்சவத்தின் போது படையினர் காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை தொடர்பில் சர்ச்சைகள் நிலவுகின்றன.வடபிராந்தியப் பிரதிப் பொலிஸ் மா அதிபரை இன்று காலை தொடர்புகொண்ட பிரதமர், இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, நயினாதீவுப் பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தப்பட்ட படையினரை அழைத்து இன்று காலை விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நடைபெற்ற சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த படையினர், தாம் வேண்டும் என்றே இவ்வாறு செய்யவில்லை எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது எனவும் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.
At the historic Nainativu Nagapooshani Amman Temple in Jaffna, The action of the soldiers cannot be allowed@GotabayaR @PresRajapaksa @RajapaksaNamal pic.twitter.com/gq7Dnjcmhs
— Mavai Senathirajah (@Mavai_S) June 22, 2020