கொளுத்தும் வெயில் வாட்டி வதைக்கிறதா? இந்த மரம் இருந்தாலே போதும்..!! ஏ.சி தேவையே இல்லை.!!

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாளும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.மார்ச் மாதத்திலேயே வெயில் கொளுத்துகிறதெ என்ற பேச்சு தான் பெரும்பாலும்.

கான்கிரீட் வீடுகளாலும், அவற்றில் இருந்து வெளியேறும் வேதியல் கூறுகளாலும், மரங்களை அழித்ததாலும் காற்று வெப்பமடைந்து வருகிறது.போதாக்குறைக்கு வாகனங்களின் புகை, அதிகப்படியாக மின் விளக்குகளால் காற்றின் வெப்பம் அதிகரிக்கிறது.

வெப்பத்தை தணிக்க இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் புங்கன் மரம், இதன் தாவரவியல் பெயர் பொங்கிமியா பின்னாடா.