கறுப்பாக இருக்கும் நீங்கள் நிரந்தரமாக வெள்ளையாக வர அற்புதமான வழி.!!

முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.

இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்:ஒரு டீஸ்பூன் பால் மற்றும் தேன் ஆகிய இரண்டையும் சமஅளவில் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, சுத்தமான தண்ணீரில் முகத்தினைக் கழுவி வர வேண்டும். இதனால் முகமானது, பிரகாசமாய் ஜொலிக்கும்.

முட்டை மற்றும் எலுமிச்சை:ஒரு முட்டையை எடுத்து அதை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும்.பின் அது நன்றாக காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் கருமை நிறம் மறைந்து முகம் வெண்மையாக இருக்கும்.

தக்காளி:தக்காளியை பாதியாக நறுக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் வறண்ட சருமம் மறைந்து முகம் பொலிவாக இருக்கும்.இஞ்சி மற்றும் தேன்:இஞ்சியை துருவி அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் சருமம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

எண்ணெய் மசாஜ்:ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதனுடன் வேப்பிலையை மசித்து போட்டு, அந்த எண்ணெயை லேசாக சூடு படுத்தி அதனை உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

யோகார்ட் மற்றும் கடலைமாவு:2 ஸ்பூன் யோகார்டுடன் 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால், பொலிவான முக அழகினைப் பெறலாம்.சீரக நீர்:1 ஸ்பூன் சீரகத்தை ஒரு கப் நீரில் கொதிக்க வைக்க வேண்டும்.பின் மிதமானதும் அந்த நீரை வடிகட்டி அதில் முகம் கழுவி வந்தால், முகத்தில் இருக்கும் மாசுக்கள் மறைந்து சருமம் பளிச்சிடும்.