முட்டைகளைப் பற்றி கோழிகளை வளர்ப்பவர்களுக்கே தெரியாத முட்டைகளின் மகத்துவம்.!

முட்டை,உணவு செரிமானத்தின் போது உண்டாகும் ஹோமோசைஸ்டீனை (ஒரு வகையான ஆமினோ அமிலம்) அழித்து விடுகின்றது. இதனால் இருதய நோய் வருவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றது. அதே நேரத்தில் இருதய நோயாளிகளுக்கு ஹோமோசைஸ்டீன் அளவு அதிகமாக இருப்பதால் முட்டையை அவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

முட்டை உடலுக்குச் சூடு. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் முட்டையைத் தவிர்க்க வேண்டுமா?பெண் குழந்தைகள் பருவ வயதிலிருந்து ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.கர்ப்ப காலங்களில் 500 மைக்ரோகிராம் அளவு ஃபோலிக் அமிலம் தேவைப்படுகிறது. அதனால் பிறக்கும் குழந்தைக்கு மூளை மற்றும் தண்டு வடத்தில் உண்டாகும் பிரச்சனைகளிருந்து பாதுகாக்கும். எனவே ஃபோலிக் அமிலம் நிறைந்த முட்டை உணவைக் கட்டாயம் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாம்.

அதிக எடை உள்ளவர்கள் முட்டையை சாப்பிடக் கூடாது?வளரும் குழந்தைகளுக்கு முட்டை அவசியம். எடை அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்குத் துரித உணவுகளைத் தருவதைத் தவிர்த்து வாரத்தில் ஐந்து நாட்களாவது முட்டை தருவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். எடை அதிகமாக இருக்கும் பெரியவர்கள் வாரத்தில் 3 முட்டைகள் வரை எடுத்துக் கொள்ளலாம். சமச்சீரான உணவைச் சாப்பிட விரும்புபவர்கள் தினமும் ஒரு முட்டையை எடுத்துக் கொள்ளலாம்.

புரதச்சத்து நிறைந்த முட்டையை சாப்பிடுவதால், பசியைக் குறைத்து, தேவைக்கு அதிகமான கலோரிகளை உட்கொள்வதைத் தடுக்கிறது. இதனால் உடல் எடை குறையுமே தவிர, எடை அதிகரிக்காது.நீரழிவு நோயாளிகள் முட்டையை சாப்பிடலாமா?நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டையைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்களின் உடல் நிலையை நன்கு அறிந்த மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியம்.முட்டையில் உள்ள கொழுப்புச் சத்துக்கள் ஆபத்தா?முட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்

முட்டையில் உள்ளது நல்ல கொழுப்புச் சத்துக்களே. நம் உடலிலுள்ள உயிரணுக்கள் சரியாக இயங்குவதற்கு கொழுப்புச்சத்துக்கள் அவசியமாகும். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஸ்டீராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு கொழுப்புச்சத்துக்கள் துணைபுரிகின்றது. இன்றைய காலக்கட்டங்களில்,” வைட்டமின் – டி “ பற்றாக்குறையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வைட்டமின் டி உற்பத்திக்கும் நல்ல கொழுப்புச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.

முட்டையும் பாலும் சேர்த்து சாப்பிட்டால், புரதசத்துக்கள் முழுவதுமாக கிடைக்குமா?முட்டையுடன் பால் வகை உணவுகளான பால், மோர், தயிர் போன்ற எந்த உணவுகளையும் சேர்க்கக் கூடாது. இதனால் முட்டையின் முழு சத்துக்களும் நமக்குக் கிடைக்காது. முட்டையுடன் வைட்டமின் –சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை சாறு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதால் முழுமையான இரும்புச்சத்து நம் உடலுக்குக் கிடைக்கும். நமது உடல் உழைப்பிற்கு, தகுந்தவாறு உண்பது சிறந்தது. குறைந்த உடல் உழைப்பு உள்ளவர்கள் வாரம் 5 முட்டைகள் சாப்பிடுவதே போதுமானதாகும்.