கருணாவுக்கு கையை விரித்த பொதுஜன பெரமுன…!!

முன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தமது கட்சியில் போட்டியிடவில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த நாட்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் போர்க்காலத்தில் 3000 படையினரை கொன்றதாக கருணா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையிலேயே, பொதுஜன முன்னணி இந்த அறிவிப்பை வெளியிட்டதாகஅங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.