கறி வாங்கும்போது நாட்டுக் கோழிக்கும் பிராய்லர் கோழிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்?

விவசாய பண்ணைகளிலும், கிராமத்து வீடுகளிலும் வளரும் கோழி தான் உண்மையான நாட்டுக் கோழி. ஆனால், இன்று நாட்டுக் கோழியும் பிராய்லர் போல் வளர்க்கிறார்கள்.


அதுதான் கொடுமை. நாட்டுக் கோழியின் விலை அதிகம். அதனால், மக்கள் பிராய்லர் கோழியை அதிகம் வாங்குகிறார்கள். சில இடங்களில் நாட்டு கோழியில் கலப்படம் வருவதாக புகார் வந்தாலும், அதனை வித்தியாசப்படுத்தி பார்க்கத் தெரியாமல் மக்கள் ஏமாந்து விடுகின்றனர்.

நாட்டுக்கோழி பொறுத்த வரையில் பிராய்லர் போல் இல்லாமல் இறைச்சி குறைவாக இருக்கும். ஆனால், எலும்பின் எடை அதிகம். மிக எளிதாக நாட்டுக் கோழி இறைச்சியை அடையாளம் காணலாம். நாட்டுக் கோழியில் சதைபற்று சற்று குறைவாக இருக்கும். மேலும், எலும்புகள் மிக திடமாக இருக்கும். பிரஷர் கூக்கரில் குறைந்தது 6 விசில் சத்தம் வரும் வரை வேக வைக்க வேண்டும். நாட்டு கோழி சமைக்கும் போது எளிதில் கறி உடையாது மற்றும் கரையாது.

இதுவே பிராய்லர் கோழியை எளிதில் அடையலாம் கண்டு கொள்ளலாம். இதன் இறைச்சி மிகவும் பெரியதாகவும், எலும்பு எளிதாக நீக்கும்படியாகவும் இருக்கும். மேலும், இது சமைக்கும் போது உடனே தயாராகிவிடும். சுவை அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் எந்த ஹோட்டலுக்கு சென்று சிக்கன் என்று கேட்டாலும், பிராய்லர் கோழியில் சமைக்கப்பட்ட பதார்த்தங்கள் தான் கிடைக்கும்.