தரமான ஆட்டு இறைச்சியை பார்த்தவுடன் கண்டுபிடிப்பது எப்படி?

வீட்டிலிருந்து கறி வாங்க செல்லும்போது, இள ஆடா பார்த்து வாங்கனும், தொடை கறியா கேட்டு வாங்கணும் என போகும் போதே சொல்லி அனுப்பவதுண்டு. இதெல்லாம் தவிர்த்து இறைச்சியின் மணத்தை வைத்தே, ஆடு சுவையானதா இல்லையா என்பதை கண்டுபிடித்து விடுவார்களும் உண்டு. அவ்வாறே எப்படியெல்லாம் நல்லாட்டு கறியை பார்த்து வாங்கலாம் என்பதை பார்ப்போம்.


பொதுவாக ஆடு, கிடா என இரு வகைகளாக ஆட்டினை வகைப்படுத்தலாம்.ஆண் இனத்தை கிடா என்றும் பெண் இனத்தை ஆடு என்றும் அழைப்பது வழக்கம். இதில் கிடா வகை ஆட்டினை உண்ணுவதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பெண் இனத்தில் கொழுப்புகள் அதிகம். காரணம், குட்டிகளை சுமக்க, பால் கொடுக்க சில கொழுப்பு வகைகளை கொண்டிருக்கும்.(அதீத கொழுப்புள்ள இறைச்சி கேடாகும்).

அப்படியென்றால், நல்ல கிடாக்கறியை பார்த்து வாங்க வேண்டும். இந்த ஆட்டின் இறைச்சியை துண்டாக்கினால் சதை ஒன்றோடொன்று ஒட்டக்கூடாது. உதிரி உதிரியாக இருக்க வேண்டும். கறி பார்க்க வெளுப்பாக இருப்பதைவிடவும், வெளிர் சிவப்பு நிறத்தில் இருந்தால் இறைச்சி சுவை மிகுந்ததாக இருக்கும்.

அதுவே அடர் சிவப்பு நிறத்தில் இருப்பின் அது பெண்ணாட்டின் கறியாகும். கறியானது பழுப்பு நிறத்தில் இருப்பின் அது பழையதாகும். இவற்றையெல்லாம் தாண்டி சமைக்கும் போது அரை வேக்காட்டில் கறியின் பச்சைவாசம் வரக்கூடாது. பச்சை வாசம் வராமல் இருப்பின் சுவையான கிடா இறைச்சியாக இருக்கும். அதுவே உடலுக்கு நல்லது.