சுவையான கரம் சுண்டல் செய்யலாம் வாங்க !

தேவையான பொருட்கள்: 500 கிராம் கடலை 1 1/2 மேகரண்டி கடுகு 1 மேகரண்டி பெரும் சீரகம் 1 மேகரண்டி செத்தல் மிளகாய் தூள் ( தனி மிளகாய் தூள்) 6 மேகரண்டி சிறிதாக வெட்டிய வெங்காயம் 10 காய்ந்த மிளகாய் சிறிதாக வெட்டியது 6 மேக சிறிதாக வெட்டிய மாங்காய் 8 மேக சிறிதாக வெட்டிய தேங்காய் சொட்டு ( பல்லுப்போல் வெட்டியது) 4 மேகரண்டி சிறியதாக வெட்டிய தக்காளி 2 மேகரண்டி தக்காளி சோஸ் 1 மேகரண்டி கரம் மசாலா ( இறைச்சி சரக்கு தூளுடன் சிறிது மிளகுதூள் சேர்க்கவும்) 4 மேகரண்டி சிறிதாக வெட்டிய கருவேப்பிலை 6 மேகரண்டி எண்ணை உப்பு தேவையான அளவு

செய்முறை:கடலையை கழுவி தண்ணீல் குறைந்தது 10 மணித்தியாலத்திற்கு ஊறவைத்து அவிக்கவும். முக்கால் பங்கு அவிந்தவுடன் தேவையான அளவு உப்புச் சேர்த்து நன்றாக அவித்து எடுக்கவும். எஞ்சியுள்ள நீரை வடித்து அகற்றி கடலையை தனியாக எடுத்து வைக்கவும். பின்பு ஒரு தாச்சி சட்டியில் 6 மேகரண்டி எண்ணைய்விட்டு சூடாக்கி கடுகைப் போட்டு வெடித்த பின்பு பெருஞ்சீரகம், வெங்காயம், கருவேப்பிலை, செத்தல் மிளகாய் என்பவற்றைப் போட்டு வதக்கவும். வெங்காயம் அரைப்பதமாக வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் என்பவற்றை முதலில் போட்டுக் கலந்து பின்பு தக்காளி சோஸ், வெட்டிய தக்காளி, மாங்காய் துண்டுகள், 1/2 பங்கு தேங்காய் சொட்டுகள், சிறிதளவு உப்பு என்பவற்றைச் சேர்த்து பிரட்டிக் கலந்து பின்பு அவித்து வைத்த கடலையைச் சேர்த்துப் பிரட்டிக் கலந்து இறக்கவும். இதன் மேல் வெட்டிய தேங்காய் சொட்டுகள் மேலால் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Thanks : Point Pedro Recipes – பருத்தித்துறை சமையல்