இரத்த தானம் செய்வதனால் இவ்வளவு நன்மைகளாம்.!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

எனக்கு சின்ன வயதில் இருந்தே இரத்தம் என்றால் அலர்ஜி. சினிமாவில் ரத்தம் வரும் காட்சியை பார்த்தால் கூட மனது திக்! திக்! என்று அடித்துக்கொள்ளும். என்னைப்போய் இரத்த தானம் கொடுக்க சொன்னா எப்படி இருக்கும். இந்த பயத்தின் காரணமாகவே இன்று வரை ரத்த தானம் கொடுக்க சென்றதில்லை. ஆனால் இந்த கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.


திடீரென்று இந்த மன மாற்றத்திற்கு காரணம் என்னவென்று கேட்கிறீர்களா? தெரிந்தால், உங்களுக்கும் அடிக்கடி இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும். ஆபத்தில் உள்ள ஒருவருக்கு ரத்தத்தை தானமாக கொடுப்பது, அவருக்கு மட்டுமே நன்மை என்று நினைத்தால் அது தவறு. இரத்த தானம் கொடுப்பதால், நம்முடைய உடலிலும் ஏராளமான நன்மை பயக்கும் மாற்றங்கள் உண்டாகும்.

18 வயது முதல் 60 வயது வரை உள்ள யார் வேண்டுமானலும், 50 கிலோ உடல் எடைக்கு மேல், நல்ல திடகாத்திரமான உடல்வாகு கொண்டிருந்தால் தாராளமாக ரத்ததானம் செய்யலாம். ஒரு முறைக்கு அதிகபட்சமாக 450 மி.லி வரை கொடுக்க முடியும். ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொடுத்தால் நல்லது. பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம்.

சீரான இடைவெளியில் ரத்த தானம் செய்து வந்தால் ஹார்ட்அட்டாக் ஏற்படும் வாய்ப்பு பெருமளவில் குறையுமாம். உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ரத்த தானம் செய்வது தடுத்து விடுகிறது. இரத்ததில் உள்ள கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடலின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மேம்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில், ரத்ததானம் செய்வது, உடலில் புதிய இரத்த செல்களை உருவாக்கும். கிராமப்பக்கம் புது ரத்தம் ஊறும் என்று பேச்சு வாக்கில் சொல்வார்கள். இதெல்லாம் தெரியாமல், சின்ன வயதில் இருந்து இரத்த தானம் கொடுக்காமல் அலட்சியமாக இருந்திருக்கிறேன். எனக்கு இப்போ புத்தி வந்திருக்கு. உங்களுக்கு?