காவல் தெய்வங்கள் எல்லையில் கம்பீரமாக நிற்கும் போது கிரகணத்தில் கோவில்களை மட்டும் மூடுவது ஏன்..?

அய்யனார், முனி போன்ற காவல் தெய்வங்கள் மட்டும் எல்லையில் கம்பீரமாக நிற்கையில், கிரகணத்தின் போது கோவில்களை மட்டும் மூடுவதற்கான காரணம் என்னவென்றால், இந்த காவல் தெய்வங்கள் வீரர்கள். அந்த ஊரை காக்க வேண்டும் என சபதம் எடுத்து காப்பவர்கள். அவர்களுக்கான கோவிலை கட்டும் போது, உச்ச கட்ட பிராண சக்தியை நிலைப்படுத்தும் செம்பு தகடுகளை கருவறையில் பதிப்பதில்லை அதுமட்டுமின்றி இவர்களுக்கு கருவறையும் இல்லை. ஆதலால் இந்த காவல் தெய்வங்கள் விதிவிலக்கே!


கோவில்கள் ஏன் மூட வேண்டும்? ஆகம விதிப்படி, உச்ச கட்ட பிராண சக்தியை நிலைப்படுத்தும் செம்பு தகடுகளை கருவறையில் பதிக்கப்பட்டு நேர்மறை சக்தியை ஈர்க்கும் வண்ணம் கோவில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கிரகணத்தின் போது வெளிப்படும் விரும்பதகாத கதிர்கள் பூமியை தாக்க வாய்ப்புண்டு என்பதால் தான் அன்று மட்டும் யாரும் வெளியே வரக்கூடாது என்கிறார்கள். அப்படி இருக்க, கோவிலை திறந்துவைத்தால் வெளியே செல்ல மாட்டார்களா? கதிர்வீச்சு அவர்களை பாதிக்காதா? அதனாலே கோவிலை மூடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல. கோவில் என்பது நேர்மறை சக்தி நிறைந்த இடம். கிரகணம் என்பது விரும்பத்தகாத எதிர்மறை கதிர்வீச்சுகளை வெளியிடும். அப்படிப்பட்ட அதீத நெகட்டிவ் எனர்ஜியை கோவிலால் உட்கரிக்க முடியாது என்பதால் கோவிலை மூடி விடுகிறார்கள்.

மழைபெய்தால் ஈசல் வருவது அப்படி இயற்கையோ அப்படித்தான் கிரகணம் வந்தால் நுண்கிருமிகள் வரும். அவை இனப்பெருக்கம் செய்ய ஏதுவான சூழலை இந்த கிரகணம் கொடுக்கும் என்பதால் வெளியே செல்லக்கூடாது. கோவிலை திறந்துவைத்தால் மக்கள் நடமாட்டம் இருக்கும். ஆக, இந்த கிருமிகள் தேவையற்ற உபாதைகளை விளைவித்துவிடுமோ என எண்ணியும் கோவில்களை மூடி விடுகின்றனர். இப்படி கிரகணத்தின் போது கோவில் மூடப்பட சில காரணங்கள் கூறப்படுவதுண்டு.