நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..! இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிமுகமாகும் புதிய செயலி..!!

இலங்கையில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கைபேசி செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் தீவிரமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இக்கொடிய நோயினை இலகுவாக கண்டறியும் முகமாகவே இச்செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பேராசிரியர் சந்தன ஜயரத்ன கருத்து வெளியிடும் போது; கொழும்பு பல்கலைக்கழக வானியல் பிரிவின் மாணவர்கள் சிலரால் இந்த புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த கைபேசி செயலி மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களை தொலைவில் வைத்தே இனங்காண முடியும்.விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளர்களை இனங்காணுவதற்காக இந்த செயலி ஊடாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது.
இதேவேளை குறித்த செயலியை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலம் வேறு நாடுகளுக்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.