இரத்தினபுரியில் கோர விபத்து…மூன்று வயதுக் குழந்தை பரிதாபமாகப் பலி..!!

இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதான வீதியின் திப்பிடிகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 03 வயது ஆண் குழந்தையொன்று பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை வேகமாக பயணித்த சிற்றூர்தியை பேருந்து முந்திச் செல்ல முற்படுகையிலேயே விபத்து சம்பவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ;

வேகமாக பயணித்த சிற்றூர்தியை பேருந்து முந்திச் செல்ல முற்படுகையில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சிற்றூர்தியில் பயணித்த 3 வயது ஆண் குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது.சிற்றூர்தியில் பயணித்த குறித்த குழந்தை ஜன்னல் வழியாக தலையை வெளியே இட்டு வந்துள்ள நிலையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.