சிறிய பூச்சி என பலமுறை நசுக்கிய இந்த கரையான்கள், மனிதனுக்கு எப்படிப்பட்ட உதவி செய்து கொண்டிருக்கிறது பாருங்க! இவை உலகத்தில் இல்லையெனில் என்ன ஆகும்?

சிறிய பூச்சியினம் கரையான் ஆனால் மனிதனுக்கு இது எவ்வளவு பெரிய நன்மை செய்கிறது என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கரையான்கள் தங்களது புற்றுக்களை அமைக்கும் விதம் மிகவும் பிரமிப்பு நிறைந்தது. அதிக ஈரப்பதமும் இல்லாமல் அதிக வறட்சியும் இல்லாத மிதமான வானிலை கொண்ட இடத்தை இவை புற்று அமைக்க தேர்ந்தெடுக்கின்றன.


இந்த புற்றின் கட்டுமான பணி கட்டிட கலைஞர்களுக்கே வியப்பளிப்பதாக கூறப்படுகிறது. தேனீக்களை போலவே இவையும் ராணிகரையான், ராஜா கரையான், இராணுவ கரையான் மற்றும் பணியாளர்கள் என்ற வேறுபாட்டுடன் உள்ளது.

இதில் பணியாளர் கரையான் புற்று அமைத்தல் மற்றும் அதனை பழுது பார்த்தல் போன்ற வேலைகளை செய்கிறது. இராணுவ கரையான்கள் ராட்சத கொடுக்குடன் எதிரி யாரவது வந்தால் அவர்களிடம் இருந்து புற்றை பாதுகாக்கும்.

இராணுவ கரையான்களுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. தன்னை தாக்க வரும் எதிரி மீது துர்நாற்றம் மிக்க ஒருவகை உமிழ்நீரை அவற்றின் மீது செலுத்துகின்றன.

இராணுவ கரையான் குறித்து ஆச்சரியமான தகவல் என்னவென்றால் இவைகளுக்கு கண்பார்வை கிடையாது.நாளுக்கு நாள் இராணுவ கரையான்கள் குறையும் போது, இவற்றின் துர்நாற்றமும் குறைந்து விடும். வாசனை குறைந்ததை அறிந்த ராணி கரையான் உடனே இராணுவ கரையானுக்கான முட்டைகளை இடும்.

கரையான்களால் மனிதனுக்கு 90% லாபமே! ஆம், இயற்கை கழிவுகளை மக்க வைப்பதில் இவை தான் ஹீரோக்கள். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கரையான்கள் மட்டும் உலகத்தில் இல்லையென்றால், உலகம் முழுவதும் குப்பை கூளத்தால் நிரம்பி, தாவரம் மக்காமல் விவாயமே அழிந்துவிடும். இவை செய்யும் வேலையை சொற்பமாக நினைக்க வேண்டாம். சின்ன வேலையை செய்து கொண்டு, உலகத்திற்கே சோறு போட்டு கொண்டிருக்கிறது கரையான்கள்.