முழுக்க முழுக்க பாலைவனம், இடையில் மட்டும் இந்த நீர் தேக்கம் எப்படி உருவானது? இயற்கையின் விசித்திரம்!

முழுக்க முழுக்க பாலைவனம் அப்படி இருக்க, நடுவில் மட்டும் பாலைவனச்சோலை அழகு கொஞ்சுகிறது. இது எப்படி சாத்தியம்? இந்த பாலைவன சோலை எப்படி உருவாகியிருக்கும் என சிந்தித்தது உண்டா?

முழு பாலைவனத்திற்கும் மழைப்பொழிவு ஏற்படாமல், இந்த சிறிய பகுதியில் மட்டும் எப்படி மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் எழாமல் இருக்காது. உண்மையில் இந்த பாலைவனச் சோலைக்கும் மழைபொழிவிற்கும் சமந்தம் இல்லை. இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், பாலைவனத்திலும் தரைக்கடியில் நீரோட்டம் இருக்கும். இதனாலே இது போன்ற இடங்களில் தாவரங்கள் செழிப்பதுண்டு.

இந்த பாலை வனசோலையில் உள்ள நீர் தேக்கமானது, பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையால் உருவாக்கப்பட்டதாம்.

பல ஆண்டுகளாக உருவான இந்த கிண்ணம் போன்ற நீர் தேக்கமானது, கடினமான களிமண்ணால் இயற்கையாக உருவாக்கப்பட்டு, மேலே உள்ள இந்த தேக்கத்தின் நீர் அடியில் செல்லாதவாறு இயற்கை தடுப்பானாக இருக்கும். இந்த ஈரப்பதத்தை பயன்படுத்தி கொண்டு தாவரங்கள் செழிப்பாக வளர்கின்றன.

இந்த பாலைவன சோலை குறித்து படித்த போது எழுந்த இன்னொரு சந்தேகம் என்னவென்றால், நிலத்தடி நீர் அல்லது இந்த இயற்கை நீர் தேக்கம் ஒரு கட்டத்தில் வற்றி விடுமே? இயற்கையின் அற்புதம் என்னவென்றால் இவை வற்றுவதில்லையாம். காரணம் பாலைவனத்திற்கு அருகில் உள்ள ஏதோ ஒரு நதியில் அரவணைப்பு தான் இந்த பாலை வன சோலையின் செழிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு எகிப்தில் உள்ள THE OASIS OF THE FAYUM எனும் சோலை கிட்டத்தட்ட 20,000 ஆண்டுகளாக வற்றவில்லை. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, சவுதி அரேபியாவில் உள்ள Al Ahsa எனும் பாலைவனசோலை பார்க்கவே காடு போல் இருக்கும். இங்கு மட்டுமே இருபத்தைந்து லட்சத்திற்கு மேலான பனைமரங்கள் உள்ளதாம். மண்ணையும் பொன்னாக்கும் மகிமை இயற்கைக்கு மட்டுமே உள்ளது