நாளைய சூரிய கிரகணத்தில் இந்த 5 ராசிகளுக்கும் மிகவும் லக்கியாம்.!! திடீர் அதிர்ஷ்டத்தினால் திக்கு முக்காடப் போவது இவர்கள் தானாம்.!!

தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ள ஞாயிறு கிழமை இந்த ஆண்டு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. ஜூன் 21ஆம் தேதி நிகழப்போகும் இந்த கிரகணம் இந்த ஆண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும்.இது மிதுனம் ராசியில் ராகு உடன் சூரியன் சந்திரன் இணையும் போது ஏற்படும் ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஆகும். 6 மணி நேரம் வானத்தில் அதிசயத்தை நிகழ்த்தப்போகும் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.

இந்த சூரிய கிரகணத்தினால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.கிரகணத்தினால் யாருக்கு அதிர்ஷ்டம்:சூரிய கிரகணம் மிதுனம் ராசியில் மிருகஷீரிடம், திருவாதிரை நட்சத்திரங்களில் நிகழப்போகிறது.இந்த சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையை தரப்போகிறது. மேஷம், சிம்மம், கன்னி, துலாம், மீனம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. கிரகணத்தால் யோகங்கள் கிடைக்கப் போகின்றன.

மேஷம்:மேஷம் ராசிக்கு மூன்றாம் வீடான தைரிய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. யோகமான நாளாக அமையப்போகிறது. தைரியம் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரருக்கு உங்களால் நன்மை ஏற்படும். எடுத்த காரியத்தை தைரியமாக முடிப்பீர்கள். இந்த கிரகணத்தினால் உங்களுக்கு தீமை எதுவும் இல்லை. உங்களின் முன்னேற்றமும் ஆளுமைத்தன்மையும் அதிகரிக்கும்.

சிம்மம்:சிம்மம் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த சூரிய கிரகணம் உங்களின் வேலை மற்றும் தொழிலில் லாபத்தை தரப்போகிறது. உங்களின் பொருளாதார நிலைமை உயர்வடையும். உறவினர்கள், நண்பர்களுடன் உறவு வலுப்படும். இந்த கிரகணம் உங்க ராசிக்கு உயர்வையும் சிறப்பையும் தரப்போகிறது.

கன்னி:கன்னி ராசிக்கு பத்தாம் வீடு வேலை தொழில் ஸ்தானம். இந்த வீட்டில் நிகழப்போகும் கிரகணத்தினால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களின் செயல்திறன் கூடும். உயர்பதவி கிடைக்கும். சம்பள உயர்வும் தேடி வரும். வராமல் இருந்த சம்பள பாக்கி வரும் பொருளாதாரம் சிறப்படையும். உங்களின் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

துலாம்:துலாம் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. தந்தையர் தினத்தில் தந்தை ஸ்தானத்தில் இந்த கிரகணம் நிகழ்வதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இந்த ராசிக்காரர்கள் அக்கறை காட்ட வேண்டும். நிறைய பாக்கியங்கள் தேடி வரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நல்ல செய்திகள் தேடி வரும்.

மீனம்:ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த சூரிய கிரகணத்தினால் நிறைய நல்ல செய்திகள் தேடி வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் எனறாலும் உங்களுடைய ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க.