அனைவரையும் அதிர வைக்கும் நாயுருவி மருத்துவம்..! இந்த செடி உங்கள் க ண்ணில் பட்டால் விட்டு வி டாதீர்கள் ஏன் தெரியுமா..!? இத படியுங்கள்…!!

நாயுருவியின் பொதுவான மருத்துவ குணங்கள் சிறுநீரை அதிகரிக்கும், உடல் நலிவைப்போக்கும் மற்றும் உடலையும் மனதையும் பொலிவாக்கும்.நாயுருவி பேஸ்ட் மற்றும் பிரஷ்முன்னோர்கள் இன்றுபோல பேஸ்ட் மற்றும் பிரஷ் இல்லாத அந்த காலங்களில், நாயுருவி வேரையே, பிரஷாகவும் பேஸ்டாகவும் பயன்படுத்தி வந்தனர். எதனால் தெரியுமா?

நாயுருவி வேர், பற்களின் வெற்றிலைக்கறைகளை நீக்கி, இயல்பான நிறத்தை அடைய வைப்பதுடன், பற்களில் படியும் தொற்றுக்களையும், அழித்து நீக்கிவிடும் தன்மைமிக்கது.மற்றும் குளிர் பானங்கள், புகை மற்றும் புலால் தவிர்த்து, நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நாயுருவி வேரில் பல் துலக்கிவர, மனம் தெளிவடைந்து, முகம் பொலிவாகும், பேச்சில் வசீகரம் பிறக்கும் என்கின்றன சித்த நூல்கள்.

சில மேஜிக் ஷோக்களில், மேஜிசியன் வாயில் ட்யூப்லைட்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை கடித்து, துப்புவதை பார்த்திருப்பீர்கள், அவர்களின் அத்தகைய அதிசயிக்கவைக்கும் திறனுக்கு செந்நாயுருவி இலைகளே காரணம். செந்நாயுருவி இலைகள் கண்ணாடிகளை அறுக்கும் தன்மை கொண்டிருப்பதால், அந்த இலைகளை வாயில் நன்கு மென்று வைத்துக்கொண்டே, இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும், பாறையையே துளைத்து செல்லும் வலுவுடையது செந்நாயுருவி என்று நாம் இந்தப்பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதை நினைவில் கொள்ளுங்கள்.நாயுருவி அரிசி:நாயுருவி செடிகளில் உள்ள கதிர்களில் உள்ளவையே நாயுருவி அரிசி எனப்படுகின்றன. இவற்றை சேகரித்து, அரிசி போல சமைத்து சாப்பிட்டு வர, நாட்கள் ஓடினாலும் பசி எடுக்காது, உடலும் தெம்பாக இருக்கும் என்கிறது சித்த மருத்துவம். மீண்டும் பசியெடுக்க, மிளகு சீரகம் வறுத்து, நீரில் கொதிக்கவைத்து பருகிவரலாம்

மேலும், இத்துடன் தினையரிசி, மூங்கிலரிசி சேர்த்து இடித்து, இந்த கலவையை தினமும், கஞ்சி செய்து பருகிவர, உடல் அபார ஆற்றல்மிகுந்த சக்தியைப்பெறும், உடல் பொலிவுண்டாகும்.சித்தர்கள் அஷ்டகர்ம மூலிகை எனும் இந்த நாயுருவி மூலிகை மூலம்தான், உடல் சோர்வு பசி, நீங்கி காடு மலைகளில் இருந்தார்கள், இதனால் செந்நாயுருவிக்கு முனிவர்க்கெல்லாம் முனிவர் எனப்பொருள்படும் வகையில் மாமுனி எனும் பெயரும் உண்டு.

நாயுருவியில் சிகப்பு வண்ணத்தில் செடிகளின் தண்டுகள் காணப்படுவதை பெண்பால் என்றும், அதையே உயரிய மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.மனிதனின் உடல் வியாதிகள் மட்டுமல்ல மன வியாதிகளுக்கும் மருந்தாகிறது அனைத்து பாதிப்புகளும் விலகும் :

அஷ்டகர்ம மூலிகை எனப்படும் குணத்தால் செந்நாயுருவி வேரை, தொழில் வளம், செல்வம் சேர வசியப்பொருளாக, அக்காலத்தில் பயன்படுத்தினர்.செந்நாயுருவி வேரை பாலில் கொதிக்கவைத்து, நிழலில் உலர்த்தி, பின்னர் தூளாக்கி, தினமும் இரவுவேளைகளில், பாலில் கலந்து பருகிவர, அனைத்துவகை மன பாதிப்புகள், இதய படபடப்பு மற்றும் தூக்கமின்மை வியாதிகள் யாவும் விலகிவிடும்.