கரையக் கூடிய நார்சத்து கொண்ட அ திசய கொட்டை! தினமும் சாப்பிட்டால் இந்த ஆபத்தான இரண்டு கொடிய நோய்களும் அலண்டு ஓடிடுமாம்!

சாப்பிடுவதற்கும் ருசியை தரும் மொச்சைக் கொட்டை மிக அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இதனை உணவில் தொடர்ந்து சேர்த்து கொள்வதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றது.அவற்றினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.


கால்சியம் மற்றும் இரும்பு சத்து ஆகிய இரண்டும் பரிந்துரைக்கபட்ட அளவு மொச்சையில் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியத்தினை அள்ளி கொடுக்கும்.மொச்சையில் லெவோடோபா என்ற வேதிப் பொருள் உள்ளது.இந்த பொருளைத்தான் பார்கின்ஸன் நோய் இருப்பவர்களுக்கு மருந்தாக மாத்திரைகளில் உபயோகப்படுகிறது.மொச்சையிலுள்ள அமினோ அமிலம் டோபமைன் நல்ல மன நிலையை அதிகரிக்கச் செய்கிறது. மன அழுத்தத்தை தடுக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.

வெறும் கால் கப் அளவு மொச்சையில் காப்பர், மெக்னீசியம், விட்டமின் பி1, தையமின், பொட்டாசியம், இரும்பு சத்து, ஆகியவ்ற்றை கொண்டுள்ளது..1 கப் மொச்சையில் 40 கிராம் புரோட்டின் உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பை குறைத்து கலோரிகளை எரிக்க உதவும்.

அதனால் வேகமாக உடல் எடை குறைய உதவும்.1 கப் அளவு மொச்சையில் 36 கிராம் நார்சத்து உள்ளது. அதுவும் கரையக் கூடிய நார்சத்து இருப்பதால் அது கொலஸ்ட்ராலையும் , சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.