மூட்டு மூட்டாக உயிரை எடுக்கும் வலியா.? எந்த மருத்துவத்திற்கும் குணமாகவில்லையா.? இந்த அற்புதமான மருத்துவத்திற்கு எல்லாம் பறந்தோடிப் போகும்.!!

40 வயது தாண்டினாலே நம்மில் சிலருக்கு நடக்க முடியாமல் மூட்டு வலி ஆரம்பித்து விடுகின்றது.அடிபட்டதன் காரணமாகவோ, தசைநார்கள் அல்லது குறுத்தெலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலோ மூட்டு வலி வரலாம்.இல்லாவிடின் கீல்வாதம் மற்றும் தொற்றுக்களின் காரணமாகவும் மூட்டு வலி வரலாம்.


மூட்டுக்களில் ஏற்படும் வலி ஆர்த்ரிடிஸ் அல்லது பலவீனமான எலும்பு அமைப்பிற்கு வழிவகுக்கும்.அதுவும் நடக்கும் போது மற்றும் நிற்கும் போது கடுமையான வலியை உணர்வது, மூட்டுக்கள் சிவந்து காணப்படுவது என்று இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வைத்தியங்களை பற்றி பார்ப்போம்

நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை, ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.ஒரு டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவுடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வீக்கம் உள்ள முழங்காலில் தடவி, ஒட்டும் காகிதத்தை ஒட்டி, எலாஸ்டிக் பேண்டேஜ் கொண்டு கவர் செய்ய வேண்டும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் மூட்டுகளில் உள்ள பேஸ்ட்டை மாற்ற வேண்டும். இப்படி தினமும் 5 முறை செய்து வந்தால், மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும வலி குறைந்துவிடும்.

கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, வீக்கம் மற்றும் வலி உள்ள மூட்டுக்களில் தடவி, சுடுநீரில் நனைத்த துணியை மேலே போர்த்த வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, வலி மற்றும் வீக்கம் குறையும்.