மனிதனின் உள்ளங்கையில் நீர் பருகும் பாம்பு..!!( வெளியாகியுள்ள காணொளி)

மனிதனின் உள்ளங்கையில் இருந்து பாம்பு ஒன்று நீர் பருகும் காணொளி ஆச்சரியத்தில் ஆழ்த்துதியுள்ளது.ஒரு வன வள திணைக்கள அதிகாரி பாம்பு ஒன்றுக்கு தண்ணீர் குடிக்க உதவும் காணொளியை பகிர்ந்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த வன வள திணைக்கள அதிகாரி தனது உள்ளங்கையில் இருந்து ஒரு பாம்பு தண்ணீரைப் பருகும் அதிர்ச்சியூட்டும் காணொளியை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில், பாம்பு கொஞ்சம் தண்ணீர் பருகியது. பாம்பு தண்ணீர் பருக நாக்கு உதவுவதில்லை.பொதுவாக பாம்புகள் தாடைகளில் தண்ணீரை எடுக்க எதிர்மறையான அழுத்தத்தை உருவாக்கி, பின்னர் வாயை மூடி ஒரு நேர்மறையான அழுத்தத்தை உருவாக்கி, தண்ணீரை தங்கள் உடலுக்குள் தள்ளும் என தெரிவித்துள்ளார்.

வன வள திணைக்கள அதிகாரியின் கூற்றுப்படி , பாம்புகள் அழுத்தத்தை உருவாக்க தாடைகளை தாழ்த்த வேண்டும் இதனால் அவைகள் உடலில் தண்ணீரை கீழே தள்ள முடியும். காணொளியை கவனமாகப் பார்த்தால், சிறிய பாம்பு தண்ணீர் குடிக்க அதன் தாடையை நகர்த்துவதை நீங்கள் காண முடியும்.இது ஒரு பச்சை கொடியின் பாம்பு, இது லேசான விஷம் கொண்டது.உண்மையில் நாம் இதுபோன்ற எதையும் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றே சொல்லவேண்டும்.