புகையிரதத்தின் முன் காதல் ஜோடி.!! பரிதாபமாகப் பலியாகிய காதலி..!! படுகாயங்களுடன் உயிர் தப்பிய காதலன்..!

மலையக தொடருந்து மார்க்கத்தின் ஹாலிஎல மஹவத்தேகம பகுதியில் இளம் ஜோடியொன்று புகையிரதத்தில் மோதிய அனர்த்தத்தில் யுவதி ஒருவர் பலியாகியுள்ளார்.

அவரது காதலரென கருதப்படும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில், பதுளை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த ஜோடி தற்கொலை செய்யும் நோக்கத்துடன் புகையிரதத்தில் பாய்ந்தார்களா அல்லது தவறுதலாக மோதி விபத்துக்குள்ளானார்களா என்பது குறித்து இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை என ஹாலிஎல காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.