ஒரேநாளில் 181, 000 பேருக்கு கொரோனா தொற்று..!!பெரும் ஆபத்தில் உலகம்..!!

வியாழக்கிழமை உலகளவில் 150,000 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். ஒரேநாளில் இந்தளவு அதிகமானவர்கள் தொற்றிற்குள்ளான முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.கொரோனா பரவலில் புதிய அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம் என உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. நாம் தற்போது புதியதும் அபாயகரமானதுமான கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா இப்போதும் அதிவேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால் முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, கை கழுவுதல் ஆகியவை தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக உலக நாடுகள் அனைத்தும் மிக மிக கவனமானவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான பயணமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

நேற்று மாத்திரம் 181,005 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். இது கொரோனா தொற்றின் புதிய உச்சமாகும். நேற்று 5,066 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 461,820 ஆக உயர்ந்துள்ளது.181,005 பேர் நேற்று தொற்றிற்குள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்க 8,750,990 ஆக உயர்ந்துள்ளது.

பிரேஸில்:நேற்று 1,221 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 49,090 ஆக உயர்ந்துள்ளது. 55,209 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகினர். 1,038,568 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்கா:நேற்று 719 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 121,407 ஆக உயர்ந்துள்ளது. 33,539 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகினர். 2,297,190 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.மெக்ஸிக்கோ:நேற்று 667 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 19,747 ஆக உயர்ந்துள்ளது. 5,662 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகினர். 165,455 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா:366 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுவரை 12,970 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 14,721 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 395,812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தவிர சிலி 252, பெரு 199, ரஸ்யா 181, பிரிட்டன் 173 ஆகிய நாடுகளில் உயிரிழப்புக்கள் பதிவாகின.