தங்க நகைப் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி….இலங்கையில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை!!

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தின கல் மற்றும் நகை ஆணைய அதிகார சபை தெரிவித்துள்ளது.நேற்று மாலை வரை ஒரு பவுண் தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் இயக்குனர் இந்திய பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கடந்த 12ஆம் திகதி முதல் 10000 ரூபாய் வரையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இதற்கு பிரதான காரணமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் தங்கத்திற்கு ஓரளவு நிலையான விலை கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.