மூன்று முட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சாதனை படைத்த இளைஞன்..

கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.இந்த சாதனை 5 வினாடிகளில் செய்து முடிக்கப்பட வேண்டும் என்றும், மூன்று முட்டைகளும் புதியனவாக இருத்தல் வேண்டும் உட்பட பல்வேறு நிபந்தனைகளை கின்னஸ் அமைப்பு விதித்து இருந்தது.இந்த இளைஞர் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு 3 முட்டைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்.பொறுமை, பயிற்சி மற்றும் ஒருமுகத்தன்மை ஆகியவை இருந்தால் மட்டுமே, இந்த சாதனை சாத்தியமாகும் என்று அந்த இளைஞர் தெரிவித்தார்.