யாழ் நோக்கி வரும் போது காலாவதியான நிலையில் பொலிஸாரிடம் சிக்கிய 400 கிலோ அரிசிமூடைகள்..!!

மூதூரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி லொறியொன்றில் “அத்தியவசிய சேவை” எனப் பொறிக்கப்பட்ட காலாவதியான அரிசி மூடைகளை எடுத்துச்சென்று லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.ரொட்டவெவ இராணுவ சோதனைச் சாவடியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மேற்படி லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறியில் 400 கிலோகிராம் அரிசி மூடைகள் காலாவதியான திகதி பொறிக்கப்பட்ட பையில் எடுத்துச் செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மொரவெவ பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் டி.ஜே. இந்திக சம்பத், பொலிஸார் இணைந்து மேற்படி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர், புத்தளம், தெவன செதபுங் கனுவ, சஹீரா கதவுற, பகுதியைச் சேர்ந்த எம்.ஹூசைன் முகம்மது சர்ராஜ் (29) என பொலிஸார் தெரிவித்தனர்.கைப்பற்றப்பட்ட அரிசியுடன் சந்தேகநபரை, பொலிஸ் பிணையில் விடுவிக்கவுள்ளதாகவும், வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.