சொறி, சிரங்கு, தேமல், போன்றவை உடனடியாக குணமாக இதை மட்டும் செய்யுங்கள்..! அதிகம் பகிருங்கள்…!!

நாம் கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்தவற்றை வாங்கி, குளிக்க பயன்படுத்துகிறோம். இதை விட நாம் வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து, நம் அழகை இன்னும் கூட்டலாம்.


இதனால் சருமம் பாதிக்கபடாது. சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் அழகை பாதுகாக்கலாம். இதனால் முகம் சுருக்கமில்லாமல், பளபளப்பாக இருக்கும்.

குளியல்பொடி தயாரிக்க:மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சோம்பு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், வெட்டி வேர் 200 கிராம், அகில் கட்டை 200 கிராம், சந்தனத் தூள் 300 கிராம், கார்போக அரிசி 200 கிராம், தும்மராஷ்டம் 200 கிராம், விலாமிச்சை 200 கிராம், கோரைக்கிழங்கு 200 கிராம், கோஷ்டம் 200 கிராம்,

ஏலக்காய் 200 கிராம், பாசிப்பயறு 500 கிராம் இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் போட்டு கலந்து உடலில் பூசி குளிக்கலாம்,இது சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும்.

மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். உடல் அழகாக மாறும்.இதை போட்டு குளிக்கும் போது சோப் போன்ற எதுவும் பாவிக்க கூடாது. கெமிக்கல் பாவிக்காமல் இதை பாவித்தால் தான் வித்தியாசத்தை உணரலாம்.