தேங்காய் வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அறிவது எப்படி? அறிவியலாலும் அறிய முடியாத தமிழர்களின் ஆச்சரிய சக்தி!!

இப்போ நிலத்தடி நீர் எங்கு அதிகம் கிடைக்கும் என்பதை அறிய, போர்வெல் வண்டிகள் புதுப்புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், இன்னும் பழைய முறை தான் நம்பகமாக இருப்பதாக பலரும் கூறி கேட்க முடிகிறது. இதனை கோவை பக்கம் “சலம்” பார்த்தால் என்று சொல்வார்கள். கிணறில் தண்ணீர் ஊற்றெடுப்பது குறைந்தாலும், “சலம்” வேற பக்கம் போச்சு என்பார்கள்.

தேங்காயை வைத்து சலம் பார்க்கும் முறை வழக்கத்தில் இருந்தாலும், தமிழகத்தில் பிற பகுதிகளில் குச்சியை வைத்து, கம்பிகளை வைத்து, பெண்டுலம் வைத்து சலம் பார்க்கும் முறையை இடத்திற்கு தகுந்தவாறு பயன்படுத்தி வருகின்றனர். மேலோட்டமாக பார்த்தால், இதில் காந்த சக்தி விளையாடுகிறது என்று நாம் யூகித்தாலும், அதனை தாண்டி மனோசக்தியே முக்கிய பங்கு வகிக்கிறது.

நானும் சலம் பார்க்கிறேன் என்று ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு ஆயிரம் பேர் கிளம்பினாலும், ஒரு சிலரின் கணிப்பே துல்லியமாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள், மனோசக்தியால் பெற்ற அனுபவமாகும். நம்முடைய ஆழ்மனதிற்கு ஆபார சக்தியுண்டு. நமக்கு நெருங்கிய ஒருவருக்கு ஏதாவது நடக்கப்போகிறது என்றால், முன்னரே அறிகுறி காட்டும். அந்த அளவிற்கு அபாரமானது.

இதை ஆராய்ச்சியெல்லாம் செய்து, “டெலிபதி” என்று பெயரிட்டு, இப்போ தான் மேலை நாடுகள் அறிந்திருக்கின்றன. அந்த வகையில் ஆதி காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருக்கும் சலம் பார்க்கும் யுக்தியை, முறையாக மனோசக்தியை கட்டுப்படுத்தி கற்றவர்களால் மட்டுமே, அதிக வெற்றிகரமான கணிப்புகளை கொடுக்க முடியும்.

சிலருக்கு இயற்கையிலேயே பரம்பரை பரம்பரையாக இந்த சக்தி இருக்கும். ஒரு சிலர் பயிற்சியினால், சலம் கணிக்கும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். ஒரு இடத்தில், நிலத்தடி நீர் அதிகம் இருக்கிறது என்றால், தானாகவே அவர்களது ஆள் மனது சிக்னல் கொடுக்க, கையில் இருக்கும் தேங்காய் தானாக நிமிரும். அங்கு நீரோட்டம் அதிகம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.