குழந்தைகள் தூங்கும் போது சிரிப்பதுண்டு, அதற்கான காரணம்? உண்மையில் கடவுள் விளையாட்டு காட்டுகிறாரா?

குழந்தைகள் தூங்கும் போது சிரிக்க, பல காரணங்களை சொல்லி கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்திற்கு கடவுள் விளையாட்டு காட்டுகிறார், முன் ஜென்ம நினைவுகள், உணர்வுகளின் ஆரம்ப வளர்ச்சி, கர்ப்பப்பையில் இருந்த போது ஏற்பட்ட நிகழ்வுகள் என குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க பல காரணங்களை கூறுவதுண்டு. என்ன காரணத்திற்காக சிரிக்கிறார்கள் எந்த அனுபவமும் இன்றி? ஏனெனில் வடிவேலு ஜோக்கை கூட பார்த்தது இல்லையே என பலமுறை சிந்தித்து இருப்போம். ஆனால் இனம்புரியாத அந்த சிரிப்பை பார்த்ததும் ஏனோ நமக்கும் சிரிப்பு பிறக்கும்.


பிறகு தான் இதற்கான காரணம் தெரியவந்தது. குழந்தைகள் தூங்கும் நேரத்தில் பாதி நேரம் வரை, அரை குறை தூக்கத்தில் தான் இருப்பார்கள். அவர்களது மூளை செயல்பாட்டிலே இருக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல அதிக நேரம் எடுக்கும். அப்போது தான் குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்கிறார்கள். நேப்பிங் என்று சொல்லப்படுகிற குட்டி தூக்கத்தின் இடைவெளியில் தான் அடிக்கடி விழித்து கொள்கிறார்கள். அப்போது தட்டிக்கொடுத்தாலோ அல்லது அரவணைத்தாலோ மீண்டும் உறக்கத்திற்கு சென்று விடுகிறார்கள்.

சரி, கேள்விக்கு வருவோம், விழித்திருக்கும் போது மூளையின் இடது புறம் செயல்பாட்டில் இருக்கும். உறங்கும் போது வலது மூளை இந்த பொறுப்பை ஏற்கும். வலது பக்கத்தில் மொழி ஆற்றல் குறைவாக உள்ள நிலையில் எண்ணங்கள் பிம்பங்களாகவே இருக்கும். அதையே கனவு என்கிறோம். கனவு இனிமையானதாக இருக்கும் போது, சிறியவர்கள் என்ன பெரியவர்கள் கூட சிரிப்பார்கள். நாம் அழுத்தம் காரணமாக தூக்கத்தில் உளறி கொட்டுகிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் அப்படி எதுவும் இருக்காது, ஆக சிரிக்கிறார்கள்.