குழந்தைகளை தன்னம்பிக்கையுடையவர்களாக வளர்க்க பெற்றோர் செய்ய வேண்டியவை!

பெரியவர்களோ சிரியவர்களோ நம்மை நமது விருப்ப சூழலுக்கு வாழ விடாமல் கட்டிப்போட்டதன் தாக்கம், எதிர்காலத்தில் தன்னம்பிக்கை அற்றவர்களாக வளர்ந்துவிடுகிறோம். விருப்ப சூழலால் நமக்கு கிடைக்கும் அனுபவம் தான் தன்னம்பிக்கையாக வளர்கிறது.

உதாரணத்திற்கு, குழந்தை விளையாடி கொண்டிருக்கும் போது விழுந்து விடுவதாக வைத்துக்கொள்வோம். பெற்றோர்கள் உடனே என்ன செய்வார்கள்? அந்த குழந்தையை கண்டிப்பார்கள் அல்லது இனிமேல் அங்கு விளையாட போக வேண்டாம் என எச்சரிப்பார்கள் இதுதான் நடக்கும். ஆனால் கீழே விழாமல் விளையாட சொல்லித்தரும் பெற்றோர்கள் மிக குறைவு. குழந்தைகளின் விருப்ப சூழலில் பிரச்சனை வந்தால், ஓடத்தான் சொல்லிக்கொடுக்கிறார்களே தவிர துணிச்சலாக நேர்கொள்ள கற்றுக்கொடுக்கிறார்களா?

குழந்தைகள் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என மிரட்டுவது. செய்த தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்கிறார்களா பெற்றோர்கள்?குழந்தைகள் எப்போதும் புதிது புதிதாக வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அதெல்லாம் நீங்கள் சொல்லிக்கொடுக்காமலே அவர்கள் கற்றுக்கொள்வது. அந்த வார்த்தையில் தவறுகள் இருந்தால், திருத்தலாம். நல்ல வார்த்தைகள் எனில் பாராட்டலாம்.

அவர்கள் விளையாடும் போது, செய்யும் விஷயங்கள் ஏதேனும் ஆபத்தாக இருந்தால், அதை செய்யவிடாமல் தவிர்ப்பதை காட்டிலும், அவர்களுக்கு அதை செய்ய வேற்று வழிகளை கற்றுக்கொடுக்கலாம்.அவர்களது வயதுக்கேற்ப, சின்ன சின்ன வேலைகளை கொடுங்கள். உதாரணத்திற்கு அவர்களால் முடிந்த எடையுள்ள பொருட்களை தூக்கிவர சொல்லுங்கள். பின்னர் நீ ஸ்ட்ராங் என கூறி பாராட்டுங்கள்.குழந்தை வளர்ப்பு, குழந்தைக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கும் கலை.