இந்து முறைப்படி வீட்டில் விக்கிரகங்கள் வைத்து பூஜிப்பது சரியா?

முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும் எந்த வழிபாடும் இறைபக்தியை அதிகமாக்குமே தவிர ஒரு போதும் குறைக்காது. உருவ வழிபாடு என்பது அவ்வுருத்தில் நமது மனதை லயிக்கவே உண்டான முறைகள். உதாரணத்திற்கு கோவில்களில் ஒரு சில கடவுள்களை பார்த்ததும் சாமியே பக்தரிடம் “என்னம்மா! உனக்கு பிரச்சனை,நான் என்ன செய்யணும் ” என கேட்பது போல விக்கிரகம் அமைந்திருக்கும்.இன்னும் சில தெய்வங்கள் ருத்ர சொரூபமாக காட்சி அளிப்பார்கள்.. பெரியவர்களே இந்த தெய்வங்களை பார்க்க அஞ்சும் போது,குழந்தைகள் பார்த்தால் கண்டிப்பாக பயந்துகொள்வார்கள். இது போன்ற நேரங்களில் கோவத்தில் உள்ள தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபடுதலை தவிர்க்கலாம்.


இந்து சமயத்தில் ‘மனதில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த பக்தர்கள் உண்டு’ என்பதையும் ‘சிவலிங்கத்துக்கு அசைவ நெய்வேத்தியம் செய்து , காலை தூக்கி வைத்து கண்ணை இறைவனுக்கு கொடுத்தவரும் உண்டு’

என்பதையும் கேள்விப்பட்டிருப்போம். இவர்கள் இருவரும் இந்து தர்மத்துக்கு உட்பட்டவர்தான்.ஆக ‘அவரவர் விருப்பப்படி வழிபாட்டு வந்தாலே கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும்’ என நமது புராணங்கள் சொல்லுகின்றன. ஆக “மனமே மார்க்கத்துக்கான வடிகால்”

கோவத்தில் உள்ள நரசிம்மர், பத்ர காளியோ , நர்த்தனமாடும் நடராஜனோ இவர்களை வீட்டில் வைத்திருப்பதில் குழந்தைகளுக்கு அச்சம் ஏற்படலாம். இவர்கள் உக்கிரமான கடவுளாக இருப்பதால்,கோவிலில் பக்தர்களையே நேருக்கு நேர் நின்று வணங்க கூடாதென சொல்லப்படுகிறது. அப்படியிருக்க கோவமான விக்கிரகங்களை கண்டு குழந்தைகள் பயப்படாத வண்ணம் அமைத்து பூஜிக்கலாம்.இல்லையேல் அந்த அவதாரத்தின் சாந்த விக்கிரகங்களை வைத்து வழிபடலாம் .