மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை படைத்த ராஜராஜ சோழனது இறுதிக்காலம் எப்படி கழிந்தது?

புதிதாக ஒரு இடத்தை விசிட் செய்ய உள்ளோம் என்றால் கண்டிப்பாக அந்த இடம் குறித்து முன்னரே இணையத்தில் தேடி அறிந்துகொள்வது பயண விரும்பிகளின் பொதுவான குணமாக இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு செல்ல குடும்பத்தில் தீர்மானித்தார்கள். நான் உடனே கோவில் குறித்து பல விஷயங்களை இணையத்தில் தெரிந்து கொண்டேன். தேடிய பலவற்றிற்கு பதில் கிடைக்காமலே உள்ளது. நான் இணையத்தை அலசிய போது கிடைத்த யாரும் கேள்விப்படாத உண்மைகள்..


தஞ்சை பெருவுடையார் கோவில் என்றாலே அதன் சிறப்பு சிற்ப கலைதான். பல இயற்கை சீற்றங்களை தாண்டி கம்பீரமாக நிற்கும் இதனது மாதிரி தஞ்சாவூர் பொம்மை.. நம்ப முடிகிறதா? இந்த பொம்மையை நீங்க எப்படி ஆட்டி வைத்தாலும் சிறிது நேரத்திற்க்கு பின்னர் தனது இயல்பான நிலையை அடையும். இதே தத்துவம் தான் இந்த கோவிலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது கோவில் கட்டுவதற்கு முன்னர் பெரிய தொட்டியை ஏற்படுத்தி அதற்குள் டன் கணக்கில் மணலை கொட்டியுள்ளனர். சில ஆண்டிற்கு முன்னர் நடந்த மறுசீரமைப்பின் போது கோவிலின் அடியில் இருந்து லாரி லாரியாக மணல் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அப்பணி கைவிடப்பட்டது. அடியில் மணல் உள்ள காரணத்தால் தான் எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் தஞ்சாவூர் பொம்மை போல பழைய நிலைக்கே தனது கட்டுமானத்தை கொண்டுவரும் யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காகவே மணல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பின் போது, பல கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் கோவிலுக்கு உதவியவர்கள், யார் என்ன கொடுத்தார்கள், எப்படியெல்லாம் உதவியுள்ளார்கள் என்ற தரவு பொறிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு படைப்பை கொடுத்த ராஜ ராஜ சோழருக்கு எப்படி மரணம் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்த பாலகுமாரன் ‘உடையார்’ இல் பின்வருமாறு எழுதியுள்ளார்.

தனது மகன் ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டிய பின்னர் உடையாளூர் அரண்மனையில் வாழ்ந்து வந்த போது தனது 67 வது வயதில் இயற்கை எய்தியதாக கூறப்படுகிறது. அங்கு அரண்மனை இருந்ததற்கு அடையாளமோ ஆதாரமோ இன்றுவரை அகப்படவில்லை.

நான் இணையத்தில் தேடியும் பதில் கிடைக்காத கேள்விகள், “பெருவுடையார் கோவிலில் ஈசானன், அக்னி போன்ற எண்திசை காவலர்கள் கைகள் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதற்கு காரணம் என்ன? ” அடுத்து, “கோவிலில் வராகிக்கு மட்டும் தனி சன்னதி உள்ளதே! பிற சப்த கன்னியருக்கு சன்னதி இல்லையே ஏன்?”, மேலும் கோவிலினுள் காதலர்கள் சென்றால் பிரிந்து விடுவார்கள் என்றும் அரசியல்வாதிகள் சென்றால் பதவி பறிபோகிவிடும்” என்ற வதந்திகளும் உலாவி வருகிறது. இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் உங்களது கருத்தை பகிரலாம்.