இடி,மின்னலின் போது விமானங்கள் வானில் பறந்தால் என்ன நடக்கும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!!

மேகத்தில் இடி, மின்னல் வரும் போது அதை விட்டு வெகுதொலைவில் இருக்கும் நமக்கே இவ்வளவு பயமா இருக்கே! இதே மேகத்தை தாண்டி பறக்கும் விமானத்தில் இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.


கொஞ்சம் டீப்பா போனா, பக்கு பக்குன்னு பயப்பட தோணும். ஆனால் அதற்கு வேலையே இல்லை இங்கே. பூமியின் முதல் அடுக்கில் தான் வளிமண்டல மாற்றங்களான, இடி, மின்னல் எல்லாம் வரும்.

விமானம் பறக்க ஆரம்பித்த உடனே, ஸ்டெடியாகி பறக்க ஆரம்பிப்பது, பூமியின் இரண்டாம் அடுக்கில் மட்டுமே. அதனால் இடி, மின்னலுக்கு பயப்பட தேவையில்லை. சரி விமானங்கள் தரையிறங்கும் போது, பூமியின் கீழ் அடுக்கிற்கு வந்து தானே ஆக வேண்டும். அப்போது இடி, மின்னலால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? என்று கேட்கலாம். அதுவும் சிம்பிள். மின்னல் அடிக்கும் போது, காருக்குள் இருந்தால் எவ்வளவு பாதுகாப்பானதோ, அதே போலத்தான் விமானமும்.

மின்னூட்டம் தரையை அடைய எந்த இணைப்பும் இல்லாத காரணத்தினால், அப்படியே காற்றோடு காற்றாக கலந்துவிடும். விமானத்தை சுற்றி பாய்ந்த மின்னோட்டமானது அடுத்து தரையிறங்க முடியாத காரணத்தினால் காற்றில் சென்றுவிடும். இதெல்லாம் தாண்டி விமானம் பறக்கும் போது கூட, காற்றின் உராய்வு விசையினால் விமானத்தை சுற்றி மின்னோட்டம் உருவாகும். அதனால், எல்லா பகுதிகளையும் மின்கடத்தியால் இணைத்திருப்பார்கள்.

இதனால் விமானம் முழுவதும் ஒரே மின் நிலைசக்தியில் இருக்கும். இதை குறைக்க விமானத்தின் பல பகுதிகளில் கூர்மையான முனைகள் போன்ற அமைப்பு இருக்கும். அதன் வழியாக மின்சார நிலைசக்தி வெளியே சென்று விடும். 98 சதவீதம் இடி, மின்னல்களால் விமானங்கள் பழுதடைய வாய்ப்பு இல்லை. அதனால் ஒரு சிறு தீப்பொறி கூட உருவாகாத அளவுக்கு வடிவமைப்பு இருக்கும். இனி விமானத்தில் பறக்கும் போது, மேகத்தினுள் என்ன நடந்தாலும் பயப்படத்தேவையில்லை.