மீண்டும் தேர்தல் களத்தில் அங்கஜன்..!! யாழில் மதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.!!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழ் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாழிலுள்ள மத்த் தலங்களுக்கு இன்று சென்று வழிபாடுகளை மேற்கொண்டு மதத்தலைர்களிடம் ஆசி பெற்று சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இந்த வழிபாடுகளும் சந்திப்புக்களும் இன்று காலையில் இடம்பெற்றிருந்த்து.
இதற்கமைய யாழ் அம்மன் வீதியிலுள்ள சின்மயா மிசன் ஆலயம் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு ஆசிகளையும் பெற்றுக் கொண்டனர். இதன் பின்னர் யாழ் ஆயர் இல்லம் சென்று யாழ் ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடி ஆசிகளைப் பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர் யாழ் நாகவிகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு விகாராதிபதியிடம் ஆசி பெற்று கொண்டனர்.இதன் இறுதியாக யாழ் ஐந்து சந்தியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குச் சென்று ஆசிபெற்றுக் கொண்டதுடன் சமகால நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.இச் சந்திப்பின் போது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.