வன்னி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த சுயேட்சையாக தேர்தலில் களம் குதித்துள்ள மன்னாரிள் பட்டதாரி மைந்தன்..!!

வன்னி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன்சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் பொன் சுபாஸ்சிங்கம் தெரிவித்தார்.

நடைபெற இருக்கும் பாராளுமனற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியில் சுயேட்சையாக போட்டியிடும் சுபாஸ்சிங்கம் ஒரு பட்டதாரி. அவரது அரசியல் வருகையின் நோக்கம் பற்றி கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது;வன்னி தேர்தல் தொகுதியில் மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்து கொண்டவன் பல வருடங்களாக அவர்களது வாழ்வில் எந்த ஒரு நல்ல மாற்றங்களும் ஏற்படவில்லை அவர்களது வாழ்வியல் மாற வேண்டும்.மக்களின் அரசியல், கல்வி, விவசாயம், பொருளாதார, சமூக கட்டமைப்புகள் ஒழுங்காக நிறுவப்பட வேண்டும் வறுமை வேலையின்மை வசதிக் குறைவுகளினைப் போக்கி, கிராமிய மக்களினுடைய கல்வியையும் விவசாயத்தினையும் பொருளாதாரத்தினையும் வாழ்வாதாரத்தினையும் அபிவிருத்தியினையும் மேம்படுத்துவதே. போரினால் பாதிக்கப்பட்டுப் போயுள்ள‌ எமது கிராமங்களிலே வாழும் இளையவர்களும் யுவதிகளும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்று, கௌரவமான வாழ்வினைத் தமது பிரதேசங்களிலேயே வாழ்வதற்கு வழி செய்வதே எனது பிரதான நோக்கமாகும் என்று வன்னி மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் பொன் சுபாஸ் சிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.