இலையுதிர் காலத்தில் மீண்டும் துளிர்விடப் போகும் கொரோனா.!! உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை.!

இலையுதிர் காலத்தில் கொரோனா 2-வது அலைக்கு சாத்தியம் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் குளூக் தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் 2-வது அலை, இலையுதிர் காலத்தில் தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது எனவும் கூறினார்.இதுபற்றி அவர் மேலும் கூறும்போது;கொரோனா வைரஸ் தொற்று குறையத்தொடங்கி உள்ள நாடுகளில், கோடையில் இது நீடிக்கும். ஆனால்அ இலையுதிர் காலம் தொடங்கும்போது 2-வது அலையை எதிர்பார்க்கிறோம்.இன்புளூவன்சா காய்ச்சலும் வரும், இருப்பினும் இது குறித்து உறுதியாக தெரியவில்லை’ என்றும் குறிப்பிட்டார்.