யாழில் அலைந்து திரியும் சிவப்புத் தொப்பி சைக்கிள் திருடன்.!! அடையாளம் காண உதவுங்கள்..!

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு (புத்தூர்) பிரதேச சபையின் வாகன தரிப்பிடத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.குறித்த துவிச்சக்கரவண்டி கொள்ளையர் அங்கே மாட்டப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் சிக்கியுள்ளார்.

சிவப்புத்தொப்பி மற்றும் அரைக்கை சேட் அணிந்த நபரே துவிச்சக்கர வண்டியை திருடிச் செல்லும் காட்சி கமராவில் பதிவாகியுள்ளது.அவரை இனம்காட்டுபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.